மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல் 4) வெளியிட்ட அறிக்கையில், "நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 93 ஆயிரத்து 249 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 513 பேர் உயிரிழந்தனர். நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 24 லட்சத்து 85 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 1.16 கோடி பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். 1.64 லட்சம் பேர் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை ஏழு கோடியே 59 லட்சத்து 79 ஆயிரத்து 651 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாட்டில் கோவிட்-19 தொடர்பான பிரச்சினைகள், தடுப்பூசி செயல்முறை குறித்து ஆய்வுசெய்ய பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்டக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். அதில், அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர், சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்ட மூத்த அலுவலர்களும் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மட்டும் 49 ஆயிரத்து 447 பேர் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் காரில் இவிஎம் இயந்திரங்கள்: 3 பேர் கைது