ETV Bharat / bharat

அதிகரிக்கும் கரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த பிரதமர் அறிவுறுத்தல் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் கரோனா தொற்று மற்றும் இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர் மட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
author img

By

Published : Mar 22, 2023, 10:05 PM IST

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக கரோனா மற்றும் இன்புளூயன்சா காய்ச்சல் தொற்று வேகமாக பரவி வருகிறது. புதன்கிழமை (இன்று) காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 1,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,026ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் உயிரிழந்ததால், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,30,813ஆக அதிகரித்துள்ளது. சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்றால் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாராத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாட்டின் தற்போதைய கரோனா நிலவரம், இன்புளூயன்சா காய்ச்சல் பரவல் குறித்த விவரங்களை அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். மேலும் கடந்த சில வாரங்களில் நாடு முழுவதும் பதிவான கரோனா தொற்று எண்ணிக்கை குறித்த விவரங்களையும் குறிப்பிட்டனர்.

5 செயல் திட்டம்: கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பரிசோதித்தல், நோயைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், வழிகாட்டு நெறிமுறை ஆகிய 5 செயல் திட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வகங்கள் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும், தீவிர சுவாச கோளாறுகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மருத்துவமனைகள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணு மாதிரிகளை INSACOG ஆய்வகங்களுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். அப்போது தான், புதிய வகை கரோனா வைரஸ் பரவல் உள்ளதா என்பதை அறிய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம்: மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும் முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதை மறக்கக் கூடாது. கடுமையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இன்புளூயன்சா மற்றும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தயார் நிலையில் மருந்துகள்: மருத்துவமனைகளில் கரோனா மற்றும் இன்புளூயன்சா நோய்களுக்குப் போதிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இருப்பதும் அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளை அறிவுறுத்தியிருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓமனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகிறாரா ஜாகிர் நாயக்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.