ஹைதராபாத் : பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்பட்ட மக்களை திருக்குலத்தார் எனக் கூறி 1000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து சமயத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய மகான் ஸ்ரீ ராமானுஜர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவருக்கு கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலும் பெரும் பக்தர்கள் கூட்டம் உள்ளது. இவரின் ஆயிரம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பிப்.2 ஆம் தேதி முதல் பிப்.14ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஸ்ரீ ராமானுஜர் சிலை தெலங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் திறக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் பங்கு பெறுகின்றன.
இந்தத் தகவலை சின்ன ஜீயர் சுவாமிகள் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “ஸ்ரீ ராமானுஜருக்கு ஹைதராபாத்தில் 216 அடி உயர பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமத்துவ சிலையை (Statue of Equality) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். முன்னதாக பிப்.3ஆம் தேதி அக்னி பிரதிஷ்டை செய்யப்படுகிறது” என்றார்.
இந்தச் சிலை மற்றும் கோயில் ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.1,000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ராமானுஜர் சிலை பிப்.5 திறப்பு