ETV Bharat / bharat

இந்த டீம் இந்தியா அனைத்து கனவுகளையும் நனவாக்கும்... பிரதமர் மோடியின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்... - சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், அது விளையாட்டு மைதானமாக இருந்தாலும் சரி, போர்க்களமாக இருந்தாலும் சரி, இந்தியாவின் ‘பெண் சக்தி’ ஒரு புதிய வலிமையுடன் புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கி வருகிறது. இந்தியாவின் 75 ஆண்டுகாலப் பயணத்தின் பங்களிப்போடு ஒப்பிடுகையில், அடுத்த 25 ஆண்டுகளில் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களான ‘பெண் சக்தி’யின் பன்மடங்கு பங்களிப்பை என்னால் பார்க்க முடிகிறது.

பிரதமர் மோடியின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்

author img

By

Published : Aug 16, 2022, 12:14 PM IST

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த முக்கியமான தருணத்தில் எனது அன்பான நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் மட்டுமல்ல, தங்கள் நாட்டை பெரிதும் நேசிக்கும் இந்தியர்களால் உலகெங்கும் நமது மூவர்ணக் கொடி பெருமை, மரியாதை மற்றும் புகழுடன் பறக்கவிடப்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசத்திற்கான கடமை ஆற்றுவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பாபுஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் ஆகியோருக்கு இந்த நாட்டில் உள்ள நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். நாட்டிற்கான கடமையே அவர்களின் வாழ்க்கைப் பாதையாக இருந்து இருக்கிறது.

சுதந்திர தின விழாவின்போது பிரதமர்

சுதந்திரப் போரில் ஈடுபட்டு, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டைக் கட்டமைக்க பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேரு, சர்தார் வல்லபாய் படேல், ஷ்யாம பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, தீன்தயாள் உபாத்யாயா, ஜெய் பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, ஆச்சார்யா வினோபா பாவே, நானாஜி, தேஷ்முக், சுப்ரமணிய பாரதி போன்ற எண்ணற்ற மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது, காடுகளில் வாழும் பழங்குடி சமூகத்தை நினைத்து நாம் பெருமைப்படாமல் இருக்க முடியாது. பகவான் பிர்சா முண்டா, சித்து-கன்ஹு, அல்லூரி சீதாராம ராஜு, கோவிந்த் குரு போன்ற எண்ணற்றோர், சுதந்திரப் போராட்டத்தின் குரலாக மாறி, தொலைதூரக் காட்டில் உள்ள நமது பழங்குடி சகோதர சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்களை தாய்நாட்டிற்காக வாழவும் இறக்கவும் தூண்டினர். சுதந்திரப் போராட்டத்தில் இது போன்று பல அம்சங்கள் இடம்பெற்றிருப்பது நமது நாட்டின் அதிர்ஷ்டமாகும்.

இன்று, நாம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடும் போது, கடந்த 75 ஆண்டுகளில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி நிர்வாகிகள், மாநில நிர்வாகம் அல்லது மத்திய நிர்வாகம் என நாட்டைக் காத்தவர்கள் மற்றும் நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் ஆகியோரின் பங்களிப்புகளை நினைவுகூருவோம். 75 ஆண்டுகளில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்த நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்கள் ஆற்றிய பங்களிப்பையும் இன்று நாம் நினைவுகூர வேண்டும்.

வலுவான கலாச்சாரம், பண்பு நிறைந்தவை; மனதிலும் ஆன்மாவிலும் ஆழமாகப் பதிந்துள்ள எண்ணங்களின் பிணைப்பின் உள்ளார்ந்த ஆற்றலை இந்தியா கொண்டுள்ளது; அதாவது - இந்தியா அனைத்து ஜனநாயகத்திற்கும் தாய் என்பதை உலகம் அறிந்திருக்கவில்லை; ஜனநாயகத்தை உயிர்த் துடிப்பாக கொண்டிருப்பவர்கள் உறுதியுடன் செயல்படும்போது, அது உலகின் மிக சக்திவாய்ந்த சுல்தான்களை கூட அழிக்கும். இந்த ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்த விலைமதிப்பற்ற வலிமை நம்மிடம் உள்ளது என்பதை அனைவருக்கும் நிரூபித்துள்ளது.

உலகமே இந்தியாவை பெருமையுடனும், எதிர்பார்ப்புடனும் பார்க்கிறது. இந்திய மண்ணில் நிலவும் பிரச்சனைகளுக்கு உலகமே தீர்வு தேட ஆரம்பித்துள்ளது. உலகில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், உலகத்தின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், 75 வருட அனுபவப் பயணத்தின் விளைவு.

130 கோடி நாட்டு மக்கள் பல தசாப்த கால அனுபவத்திற்குப் பிறகு, நிலையான அரசாங்கத்தின் முக்கியத்துவம், அரசியல் நிலைத்தன்மையின் வலிமை, கொள்கைகள் மற்றும் கொள்கைகளில் நம்பிக்கை எவ்வாறு வளர்கிறது என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர். உலகமும் இப்போது அதை புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது அரசியல் நிலைத்தன்மை, கொள்கைகளில் சுறுசுறுப்பு, முடிவெடுப்பதில் வேகம், எதையும் சாதிக்கும் துணிவு, உலகளாவிய நம்பிக்கை இருக்கும் போது, அனைவரும் வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறுகிறார்கள்.

புதிய தேசியக் கல்விக் கொள்கை, பல்வேறு நபர்களின் கருத்துப் பரிமாற்றத்துடன், பல சிந்தனை கூட்டங்களுடன் உருவாக்கப்பட்டு, நாட்டின் கல்விக் கொள்கையின் அடிநாதமாக இருப்பதை நான் நம்பிக்கையுடன் பார்க்கிறேன். நாம் வலியுறுத்திய திறமை, அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான வலிமையைத் தரும் சக்தியை உடையது.

டிஜிட்டல் இந்தியாவின் கட்டமைப்பை இன்று நாம் காண்கிறோம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்கிறோம். இவர்கள் யார்? இது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அல்லது கிராமங்களில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திறமையாளர்களின் குழுவாகும். இன்று புதிய கண்டுபிடிப்புகளுடன் உலகத்தின் முன் வந்து கொண்டிருக்கும் நமது இளைஞர்கள் இவர்கள்தான்.

எலக்ட்ரானிக் பொருட்கள் அல்லது மொபைல் போன்கள் உற்பத்தியாக இருந்தாலும், இன்று நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது. நம் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி செய்யப்படும் போது எந்த இந்தியன் பெருமைப்பட மாட்டான்? இன்று வந்தே பாரத் ரயிலும் நமது மெட்ரோ ரயில் பெட்டிகளும் உலகையே ஈர்க்கும் பொருளாக மாறி வருகிறது.

எரிசக்தி துறையில் நாம் தற்சார்பு பெற வேண்டும். எரிசக்தி துறையில் நாம் எவ்வளவு காலம் மற்றவர்களைச் சார்ந்து இருப்போம்? சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி போன்ற பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலில் நாம் தற்சார்பு பெற்றிருக்க வேண்டும். ஹைட்ரஜன் இயக்கம், உயிரி எரிபொருள் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் முன்னணியில் இருக்க வேண்டும்.

இன்று நாம் அனைவரும் 5ஜி சகாப்தத்தில் நுழைய தயாராக இருக்கிறோம். உலகளாவிய வளர்ச்சி படியை எட்டிப்பிடிக்க நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. ஆப்டிகல் ஃபைபர் ஒவ்வொரு கிராமத்திலும் கடைசி மைல் வரை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்கிறோம். டிஜிட்டல் இந்தியாவின் கனவு கிராமப்புற இந்தியா மூலம் எட்டப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று கிராமங்களில் அந்த கிராமத்தின் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் நான்கு லட்சம் பொது சேவை மையங்கள் உருவாக்கப்படுவதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது அடல் புத்தாக்க இயக்கம், நமது இன்குபேஷன் மையங்கள், நமது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இளைய தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து, ஒரு புதிய துறையை உருவாக்கி வருகின்றன. விண்வெளிப் பயணமாக இருந்தாலும் சரி, நமது ஆழ்கடல் பயணமாக இருந்தாலும் சரி, கடலுக்குள் ஆழமாகச் செல்ல வேண்டுமா அல்லது வானத்தைத் தொட வேண்டுமா, இவை புதிய பிரிவுகள், இவை மூலம் நாம் முன்னேறி வருகிறோம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், அது விளையாட்டு மைதானமாக இருந்தாலும் சரி, போர்க்களமாக இருந்தாலும் சரி, இந்தியாவின் ‘பெண் சக்தி’ ஒரு புதிய வலிமையுடன் புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கி வருகிறது. இந்தியாவின் 75 ஆண்டுகாலப் பயணத்தின் பங்களிப்போடு ஒப்பிடுகையில், அடுத்த 25 ஆண்டுகளில் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களான ‘பெண் சக்தி’யின் பன்மடங்கு பங்களிப்பை என்னால் பார்க்க முடிகிறது. இந்த அம்சத்தில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, எவ்வளவு அதிக வாய்ப்புகளையும், வசதிகளையும் நம் மகள்களுக்கு வழங்குகிறோமோ அவர்கள் அதை விட அதிகமாக நமக்குத் திருப்பித் தருவார்கள். நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார்கள்.

புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கி, புதிய தீர்மானங்களை கொண்டுவந்து, நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் ‘அமிர்த காலத்தை’ இன்றே தொடங்குமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா அமிர்த காலத்தின் திசையில் நகர்ந்துள்ளது. எனவே, இந்த ‘அமிர்த காலத்தில் அனைவரின் முயற்சியும் அவசியம். இந்திய அணி என்ற உற்சாகம் நாட்டை முன்னேற்றப் போகிறது. 130 கோடி நாட்டு மக்களைக் கொண்ட இந்த டீம் இந்தியா ஒரு அணியாக முன்னேறி அனைத்து கனவுகளையும் நனவாக்கும்.

இதையும் படிங்க: வாஜ்பாய் 4ஆம் ஆண்டு நினைவு நாள்... குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.