பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மூன்று நாள் பயணமாக நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வெள்ளிக்கிழமை (ஏப். 1) இந்தியா வந்தடைந்தார். இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, போக்குவரத்து குறித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இருவரும் ஜனக்பூர்-ஜெயநகர் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளனர். இந்த ரயில் பிகாரின் ஜெயநகர் ரயில் நிலையத்தில் இருந்து நேபாளத்தின் ஜனக்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்பட உள்ளது. இதையடுத்து நேபாள பிரதமர், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் இருவரையம் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உகாதி பண்டிகை : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!