வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 புதன்கிழமை அன்று அங்கு சென்றார். மேலும் வரும் ஜூன் 23ஆம் தேதி வரை உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் முதல் நாளான புதன்கிழமை அமெரிக்காவின் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இரண்டாவது நாளான இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். மேலும் வெள்ளை மாளிகைக்கு அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி வரவேற்றனர்.
இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி ஒன்றைப் பரிசாக வழங்கினார், பிரதமர் மோடி. இது ராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது ஆகும். கர்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து பெறப்படும் சந்தன மரங்கள், தாவரங்கள் போன்றவற்றை வைத்து நுட்பமான முறையில் செதுக்கப்பட்டதாகும். மேலும், இப்பெட்டியில் விநாயகர் சிலை, எண்ணெய் விளக்கு ஆகிய பொருட்கள் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிங்க: காழ்ப்புணர்ச்சியினால் சிலர் சனாதனத்தைப் பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி
இதே போல், அமெரிக்காவின் முதல் பெண்மணி என்று செல்லப்படும் அதிபர் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடனுக்கு 7.5 காரட் பச்சை வைரத்தை (green diamond) பிரதமர் மோடி பரிசளித்தார். இந்த வைரக்கல்லானது சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்தினால் தயாரிக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இந்தப் பெட்டியானது ஒரு பேப்பர் மாச்சோவில் வைக்கப்பட்டிருந்தது. இது கர்-இ-கலாம்தானி என்றும் அழைக்கப்படும். இந்த பேப்பர் மாச்சோ, காகிதக் கூழ் (paper pulp) மற்றும் நக்காஷி ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இந்தப் பச்சை வைரமானது இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரம் மற்றும் நிலையான சர்வதேச உறவுகளை அடையாளப்படுத்தும் ஒரு கலங்கரை விளக்கமாகும்.
-
The sandalwood box contains the idol of Ganesha, a Hindu deity considered as the destroyer of obstacles and the one who is worshipped first among all gods. The idol has been handcrafted by a family of fifth-generation silversmiths from Kolkata.
— DD News (@DDNewslive) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The box also contains A diya… pic.twitter.com/BtmKALlQGX
">The sandalwood box contains the idol of Ganesha, a Hindu deity considered as the destroyer of obstacles and the one who is worshipped first among all gods. The idol has been handcrafted by a family of fifth-generation silversmiths from Kolkata.
— DD News (@DDNewslive) June 22, 2023
The box also contains A diya… pic.twitter.com/BtmKALlQGXThe sandalwood box contains the idol of Ganesha, a Hindu deity considered as the destroyer of obstacles and the one who is worshipped first among all gods. The idol has been handcrafted by a family of fifth-generation silversmiths from Kolkata.
— DD News (@DDNewslive) June 22, 2023
The box also contains A diya… pic.twitter.com/BtmKALlQGX
இதனை அடுத்து, பிரதமர் மோடி, லண்டனின் பேப்பர் மற்றும் பேப்பர் லிமிடெட் வெளியிடப்பட்ட, கிளாஸ்கோ பல்கலைக்கழக அச்சகத்தில் அச்சிடப்பட்ட புத்தகத்தின் முதல் பதிப்பான ‘தி டென் பிரின்சிபல் உபநிஷாட்ஸ்’ எனும் புத்தகத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பரிசளித்தார்.
அதுமட்டுமில்லாமல், 1937ஆம் ஆண்டில், WB Yeats, ஸ்ரீ புரோஹித் சுவாமியுடன் இணைந்து எழுதிய இந்திய உபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். இது WB Yeatsயின் படைப்புகளில் ஒன்றாகும்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வைத்து இன்று விருந்தளிக்கிறார்.
இதையும் படிங்க: புதுச்சேரி பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க நடவடிக்கை: துணைநிலை ஆளுநர் தமிழிசை தகவல்!