ETV Bharat / bharat

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி: சமூக வலைதள பக்கங்களில் முகப்பு படங்களை மாற்றிய பிரதமர்! - 76வது சுதந்திர தினம்

Har Ghar Tiranga campaign: நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்னும் சில நாட்களில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்கள் தங்களது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து அந்த போட்டோக்களை பிரத்யேக போர்டலில் பதிவிடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி’ பிரச்சாரத்தில் இணையுங்கள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

author img

By

Published : Aug 13, 2023, 1:55 PM IST

டெல்லி: நமது நாடு சுதந்திரம் பெற்று 76ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், நாட்டின் 76வது சுதந்திர தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மூவர்ண தேசியக் கொடியை தனது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படங்களாக மாற்றி உள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படங்களாக, தான் தேசியக் கொடியை மாற்றி உள்ளது போன்று, நாட்டு மக்களும், தங்களது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படத்தை மாற்றி அமைக்குமாறு பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 11) வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், நாட்டு மக்கள், தங்களது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படமாக மூவர்ண தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் நமது நாட்டிற்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் வகையிலான இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று (ஆகஸ்ட் 13) முதல் வருகிற 15ஆம் தேதி வரையிலான நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ள ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி’ (Har Ghar Tiranga) பிரச்சாரத்தில் இணைய வேண்டுமென பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: Sridevi 60th birthday: கூகுள் வெளியிட்ட டூடுளின் பின்னணி!

அது மட்டுமல்லாமல், “இந்திய நாட்டின் மூவர்ண தேசியக் கொடி, சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வைக் குறிக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு இந்தியரும் மூவர்ணக் கொடி உடன் ஒரு உணர்வுப் பூர்வமான தொடர்பைக் கொண்டு உள்ளனர். இது நாட்டின் முன்னேற்றத்திற்கு, கடினமாக உழைக்க, நம்மை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

எனவே, நாட்டு மக்கள் மூவர்ண தேசியக் கொடி உடன் போட்டோ எடுத்து, அந்த போட்டோக்களை https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நாட்டின் 76வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பத்ரிநாத் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.