ETV Bharat / bharat

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வெண்கல தேசிய சின்னம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

author img

By

Published : Jul 11, 2022, 3:44 PM IST

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கூரையில் வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

pm
pm

டெல்லி: சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடம் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 75வது சுதந்திர தினத்திற்கு முன்பு நாடாளுமன்ற கட்டடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தின் பிரம்மாண்ட சிலை கட்டப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 500 கிலோ எடை, ஆறரை மீட்டர் உயரமும் கொண்ட இந்த தேசிய சின்னத்தின் சிலை, வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை தாங்கும் வகையில் சுமார் 6 ஆயிரத்து 500 கிலோ எடையில் இரும்பிலான அடித்தளமும் கட்டப்பட்டுள்ளது.

இந்த தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது, ​​நாடாளுமன்ற கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் மோடி கலந்துரையாடினார். இந்த சிலையை நிறுவும் பணி, களிமண்ணிலிருந்து மாதிரிகளை உருவாக்குதல், கணினி வரைகலை, வெண்கல உருவங்களை மெருகூட்டுதல் உள்ளிட்ட எட்டு கட்டங்களில் நடைபெற்றதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.