டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மேகாலயா மற்றும் திரிபுராவிற்கு இன்று(டிசம்பர் 18) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேகாலயாவில் பிரதமர், ரூ.2,450 கோடி மதிப்பிலானப் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்தப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அந்த வகையில், தொலைத்தொடர்பு சேவை மற்றும் இணைப்பை, மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், பிரமதர் 4ஜி செல்போன் கோபுரத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
உம்சாளியில் ஷில்லாங் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் புதியக் கட்டடத்தையும் திறந்து வைக்கிறார். புதிய ஷில்லாங் சேட்டிலைட் டவுன்ஷிப்பிற்கும், டிகாங்கெஸ்ட் ஷில்லாங்கையும் இணைக்கும் ஷில்லாங்-டெங்க்பசோஷ் சாலைத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேகாலயா, மணிப்பூர் மற்றும் அருணாலச் பிரதேசங்களை இணைக்கும், 4 இதர சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். காளான் ஸ்பான் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில் முனைவோருக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கவும், உதவும் வகையில், மேகாலயாவின் காளான் மேம்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பான் ஆய்வகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
இதேபோல், தேனீ வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக, மேகாலயாவில் தேனீ வளர்ப்பு மேம்பாட்டு மையத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அசாமில் அமைக்கப்பட்டுள்ள 21 இந்தி நூலகங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள 6 சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஷில்லாங் தொழில்நுட்ப பூங்காவின் 2ம் கட்டப் பணிகளுக்கும், துராவில் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் கன்வென்சன் மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
அதேபோல திரிபுராவில் ரூ.4,350 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்தப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அனைவருக்கும் சொந்த வீடு என்பதை உறுதி செய்யும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை உள்ளிட்டக்கிய, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (கிராமம் மற்றும் நகர்புறம்) திட்டத்தி கீழ் ரூ.3,400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கிரகப் பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சாலை இணைப்பை மேம்படுத்தும் விதமாக, அகர்தலா புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிஎம்ஜிஎஸ்ஒய் IIIன் கீழ் 32 சாலைகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் உயிருடன் இருக்கும் போதே நினைவு நாளை கொண்டாடும் முன்னாள் அமைச்சர்