டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி காலை ஏழரை மணிக்கு கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதனால், டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
5 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உயர் அலுவலர்கள், தூதர்களும் பங்கேற்க உள்ளனர். முதன்முறையாக, இந்தாண்டு பிரதமர் கொடியேற்றும்போது, இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட உள்ளன. கரோனா தொற்று பேரிடர் காலம் என்பதால், தனி மனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விழா நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம் - குடியரசுத் தலைவர் உரை