ETV Bharat / bharat

10 லட்சம் பேருக்கு வேலை, 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் - பிரதமர் மோடி - ரோஸ்கர் மேளா

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் வேலைவாய்ப்பு முகாமை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

PM Modi to launch drive to recruit 10 lakh people

author img

By

Published : Oct 21, 2022, 9:34 AM IST

டெல்லி: இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நாடு முழுவதும் நடக்கவிருக்கின்றன இந்த முகாமை (ரோஸ்கர் மேளா) அக்டோபர் 22ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்த முகாமில் புதிதாக நியமிக்கப்படவிருக்கும் 75,000 புதிய பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்குகிறார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் குடிமக்கள் நலனை உறுதி செய்தலை நோக்கிய அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் இது முக்கியமான நடவடிக்கையாகும். அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் தற்போதுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பிரதமரின் வழிகாட்டுதல்படி அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் இயக்கம் போல் செயல்படுகின்றன.

நாடு முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்டு புதிதாக பணி அமர்த்தப்படுவோர் மத்திய அரசின் 38 அமைச்சகங்கள்/துறைகளில் பணியில் சேர்வார்கள். பிரிவு-ஏ, பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெற்றவர்கள்), பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெறாதவர்கள்), பிரிவு-சி என பல்வேறு நிலைகளில், இவர்கள் அரசுப் பணியில் சேர்வார்கள். மத்திய ஆயுதப்படை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், கீழ்நிலை எழுத்தர்கள், சுருக்கெழுத்தர்கள், தனி உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பலவகை பணி செய்வோர் (எம்டிஎஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்களாக இவை இருக்கும்.

மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தாங்களாகவோ அல்லது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் நியமன வாரியம் போன்ற பணிநியமன முகமைகள் மூலம், இயக்கம் போல் இந்த பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. இதனை விரைவுப்படுத்த தெரிவு நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு தொழில்நுட்ப ரீதியாகவும், நடத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அன்டோனியோ குட்ரெஸூக்கு இந்தியா 2ஆவது வீடு போன்றது - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.