கடந்த 85 நாள்களில் இல்லாத அளவுக்கு, கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று (மார்ச்.15) மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனா சூழல், தடுப்பூசி விநியோகம் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் வகையில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை (மார்ச். 17) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே, பிரதமர், முதலமைச்சர்கள் ஆகியோருக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம் வழக்கமாக நடைபெற்றுவருகிறது.
முன்னதாக கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குவதற்கு முன்பு, ஜனவரி மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.