ETV Bharat / bharat

டெல்லி-மும்பை விரைவுச்சாலையின் முதல் பாதியை திறந்து வைக்கும் பிரதமர் மோடி - இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலை

இந்தியாவின் மிக நீளமான டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

டெல்லி-மும்பை விரைவுச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

author img

By

Published : Feb 12, 2023, 8:50 AM IST

தௌசா: இந்தியாவின் மிக நீளமான டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் பகுதியான டெல்லி-தௌசா - லால்சோட் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 12) திறந்து வைக்கிறார். இந்த சாலை 246 கி.மீ நீளம் கொண்டது. ரூ.12,150 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயண நேரத்தை 5 மணி நேரத்திலிருந்து 3.5 மணி நேரமாகக் குறைக்க முடியும். ராஜஸ்தான் மாநிலம் தௌசாவிற்கு செல்லும் பிரதமர் மோடி இந்த சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன்பின் ரூ 5,940 கோடிக்கும் அதிகமான திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும் 247 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

டெல்லி மும்பை விரைவுச்சாலை 1,386 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாகும். இந்த சாலை டெல்லி மற்றும் மும்பை இடையேயான பயண தூரத்தை 1,424 கிலோமீட்டர் முதல் 1,242 கிலோமீட்டர் வரை அதாவது 12 சதவீதமாக குறைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுவருகிறது. அதேபோல பயண நேரம் 24 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதாவது கிட்டத்தட்ட 50 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை கடந்து செல்கிறது.

இதனிடையே கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது. அதேபோல 93 பொருளாதார முனைகள், 13 துறைமுகங்கள், 8 முக்கிய விமான நிலையங்கள், 8 பல்நோக்கு மாதிரி தளவாட பூங்காக்கள், புதிதாக வரவிருக்கும் பசுமை விமான நிலையங்களான ஜேவர், நவி மும்பை மற்றும் ஜேஎன்பிடி துறைமுகம் ஆகியவற்றிற்கு முக்கிய இணைப்பு சாலையாக பயன்படும். அதிவேக நெடுஞ்சாலையானது அனைத்து அண்டை பிராந்தியங்களின் வளர்ச்சிப் பாதையில் பொருளாதார மேம்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் மிக நீளமான டெல்லி-மும்பை விரைவுச்சாலை ஒருபார்வை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.