ETV Bharat / bharat

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்!

author img

By

Published : Nov 17, 2020, 9:39 AM IST

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார். இந்த 12ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யா தலைமையில் நடக்கிறது.

12th BRICS Summit Vladimir Putin பிரிக்ஸ் மாநாடு நரேந்திர மோடி ஜி ஜின்பிங் விளாடிமிர் புதின் BRICS

டெல்லி: ரஷ்யா தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (நவ.17) கலந்துகொள்கிறார். இம்மாநாட்டில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இரு தரப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத தடுப்பு, வணிகம், ஆரோக்கியம், எரிசக்தி, போக்குவரத்து உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்படுகிறது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ்- Brazil-Russia-India-China-South Africa -BRICS) நாடுகளுக்கு இடையேயான இந்த பிரிக்ஸ் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ஜூன் 15-16ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில், கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி வன்முறை தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இந்தியா லடாக் எல்லையை நிரந்தரமாக மூடியுள்ளது, சீனா, இந்தியா உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எல்லையில் அவ்வப்போது போர் பதற்றம் வந்து மறைகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் காணொலி வாயிலாக ஒருவருக்கொருவர் சந்திக்க உள்ளனர்.

முன்னதாக நரேந்திர மோடி, ஜி ஜின்பிங் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஒருவருக்கொருவர் காணொலி வாயிலாக முகம் பார்த்து சந்தித்திருந்தனர். பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள் ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய சூழலில் முக்கிய பிரச்னைகள், பன்முக அமைப்பின் சீர்திருத்தம், தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு, வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி மற்றும் மக்களிடமிருந்து மக்களுக்கு பொருள்கள் பரிமாற்றம்” குறித்து பேசுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆவது பிரிக்ஸ் மாநாடு 2021ஆம் ஆண்டு இந்தியா தலைமையில் நடக்கிறது. ஏற்கனவே இந்தியா தலைமையில் பிரிக்ஸ் மாநாடு 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடந்தது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: ஹஜ் யாத்திரை; பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.