டெல்லியில் நேற்று (ஏப். 21) 15ஆவது சிவில் சர்வீஸ் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், அரசின் திட்டங்களை திறம்பட அமல்படுத்தி சிறப்பாக செயல்பட்ட 16 அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
அப்போது, அரசு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அவர், "நாம் எடுக்கும் முடிவுகளில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது. ஜனநாயக அமைப்பில் மூன்று விஷயங்களில் நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று சாமானிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இரண்டு சர்வதேச அளவிலான பரந்த கண்ணோட்டத்துடன் திட்டங்களையும் செயல்பாடுகளையும் வகுக்க வேண்டும். மூன்றாவது தேசிய ஒருமைப்பாட்டை முதன்மையாக கருத வேண்டும் என்று தெரிவித்தார்.
அத்துடம், "இந்தியாவின் 100ஆவது சுதந்திர தினம், வழக்கமான ஒன்றாக இருக்காது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் ஒற்றுமையை நிலை நாட்டுவது சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு. நிர்வாக சீர்திருத்தங்களை இயல்பான நிலைப்பாடாக கொண்டு அனைவரும் முன்னேற வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் புல்டோசர்கள் - பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!