மாலத்தீவு அதிபர் முகமது சோலிஹ் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையடலில், இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் முன்னேறங்கள் குறித்து பேசப்பட்டது.
கோவிட்-19 தொற்று பாதிப்பையும் தாண்டி, இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் வேகமான பாதையில் செயல்படுத்தப்படுவதாக மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, மாலத்தீவு நாட்டிற்கு இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியளித்துள்ளார். அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாகவும், கடற்சார் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு கூட்டணியில் அண்டை நாடுகளே பிரதான பங்களிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மடாதிபதியான 5 வயது சிறுவன்!