நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மக்களவை இன்றுடன் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின்னர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறையில், சபாநாயர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், விலைவாசி உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.
இந்தக் கூட்டத்தொடரில் மக்களவையில் செயல்பாடு 22% மட்டுமே என தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒரு மாத கூட்டத்தொடரில் 21 மணிநேரம் மட்டுமே மக்களவை செயல்பட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: தடுப்பூசி போடனும், இல்லன கரோனா டெஸ்ட் எடுக்கனும் - கேரள மதுப்பிரியர்களுக்கு கெடுபிடி