மனத்தில் குரல் நிகழ்ச்சி மூலம் இன்று நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, "தடுப்பூசி தொடர்பான புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம்.
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசிகளைத் தொடர்ந்து அனுப்பிவருகிறது. மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இந்தத் தடுப்பூசி திட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களும் முன்வந்து பங்கேற்று தனது ஊழியர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் கோவிட்-19 தொடர்பான தகவல்களை முறையாக மருத்துவர்களிடம் கேட்டறிந்துகொள்ள வேண்டும்.
முதல் அலையை நாம் வெற்றிகரமாக கடந்து வந்துவிட்டோம். தற்போது இரண்டாம் அலை நாட்டு மக்களின் பொறுமையைச் சோதிக்கிறது. பலர் தங்கள் உற்றாரை இழந்து வாடுகின்றனர். இந்த இக்கட்டான சூழலிலிருந்து மீண்டுவர வல்லுநர்களிடம் தொடர் ஆலோசனையை மேற்கொண்டுவருகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏப்ரல் 28ஆம் தேதிமுதல் தடுப்பூசி பதிவு தொடக்கம் - மத்திய அரசு