ஐதராபாத் : ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டி கலந்து கொள்கின்றனர். மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாடு நடைபெறும் பிரகதி மைதான் முன் 28 டன் எடையிலான ராட்சத நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. மாநாடுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளே கண்டு வியக்கும் வகையில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
வாசுதேவ குடும்பகம் உணர்த்தும் செய்தி என்ன? : விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை வரவேற்க தடபுடல் வரவேற்புகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஜி20 மாநாடு குறித்து பிரதமர் மோடி கட்டுரை வெளியிட்டு உள்ளார். அதில், "வாசுதேவ குடும்பகம் - இந்த இரண்டு வார்த்தைகள் உள்ளார்ந்த தத்துவங்களை கொண்டதாக காணப்படுகிறது.
உலகம் ஒரே குடும்பம் என்பதை இந்த வாசகம் உணர்த்துகிறது. எல்லைகள், மொழிகள் மற்றும் சித்தாந்தங்களை கடந்து ஒரு உலகளாவிய குடும்பமாக முன்னேற நம்மை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. ஒரே பூமியாக, நமது கிரகத்தின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு வருகிறோம். அதேபோல் ஒரு குடும்பமாக அனைத்து தரப்பும் வளர்ச்சியைத் தொடர ஒருவருக்கொருவர் ஆதரவளித்து வருகிறோம்.
எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் : நாம் ஒன்றாக இணைந்த எதிர்காலத்தை நோக்கி நகர்கிறோம், ஒரு எதிர்காலம் இது மற்றொன்றோடு இணைக்கப்பட்ட இந்த காலங்களில் மறுக்க முடியாத உண்மையாகும். கரோனாவுக்கு பின் உலகம் அதற்கு முன்பு இருந்ததை விட பன்மடங்கு மாறுபட்டு காணப்படுகிறது. முன்பு இருந்ததை காட்டிலும் ஒப்பிடுகையில் மூன்று முக்கியமான மாற்றங்கள் காணப்படுகின்றனர்.
முதலாவதாக, உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட பார்வையில் இருந்து விலகி மனிதனை மையமாகக் கொண்ட பார்வைக்கு மாறுவதன் அவசியத்தை உணர்த்துவது அதிகரித்து உள்ளது. இரண்டாவதாக, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டு உள்ள பின்னடைவு மற்றும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை உலகம் அங்கீகரித்து உள்ளது.
விளிம்புநிலை நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் முயற்சி : மூன்றாவதாக, உலகளாவிய நிறுவனங்களின் சீர்திருத்தத்தின் மூலம் பன்முகத்தன்மையை உயர்த்துவதற்கான ஒரு கூட்டு அழைப்பு உருவாக் உள்ளது. இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு இந்த மூன்று மாற்றங்களை மையமாக கொண்டு இயக்குவதை முன்னிறுத்திச் செல்கின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவிடம் இருந்து ஜி20 அமைப்பிற்கான தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்த மாநாடு முன்னிறுத்தும் போக்கை மாற்ற வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன்.
அதுவும் குறிப்பாக வளரும் நாடுகளான தெற்கு மற்றும் ஆபிரிக்கா உள்ளிட்ட விளிம்புநிலை நாடுகளின் கருத்துகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக குறிப்பிட்டு இருந்தேன். இந்தியாவின் தலைமையில் நடைபெறும் உச்சி மாநாடு 125 நாடுகளின் பங்கேற்பை கொண்ட உலகளாவிய தெற்கின் குரலாக இருக்க வேண்டும்.
இந்தியா முன்னிறுத்து இயற்கையோடு இயந்த வாழ்க்கை : உலகளாவிய உள்ளீடு மற்றும் யோசனைகளை சேகரிப்பது ஒரு முக்கியமான பயிற்சியாகும். மேலும், நமது பிரசிடென்சி ஆபிரிக்க நாடுகளின் மிகப்பெரிய பங்கேற்பைக் கண்டது மட்டுமல்லாமல், ஆபிரிக்க ஒன்றியத்தை G20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக சேர்ப்பதற்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.
இயற்கையோடு இயைந்து வாழ்வதை இந்தியா பழங்காலத்தில் இருந்தே முன்னிறுத்தி வருகிறது. மேலும் தற்போதைய நவீன காலத்தில் காலநிலை ஏற்பட் இந்தியா அதன் பங்களிப்பை அளித்து வருகிறது. உலகளாவிய தெற்கின் பல நாடுகள் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன மற்றும் காலநிலை நடவடிக்கை ஒரு நிரப்பு நோக்கமாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா வலியுறுத்தி வருகிறது.
காலநிலை மாற்றத்திற்கான இந்தியாவின் கோட்பாடு என்ன? : காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கு இடையே, எதை செய்யக்கூடாது என்ற மிக முக்கியமான அணுகுமுறையில் இருந்து விலகி செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக இந்திய மக்கள் நம்புகின்றனர்.
பெருங்கடல்களை பாதுகாப்பாக வைத்திருக்க கவனம் செலுத்தும் ஒரு நிலையான மற்றும் நீல பொருளாதாரத்தை உருவாக்கும் விதமாக சென்னை உச்சி மாநாடு ஊக்கமளிக்கின்றன. பசுமை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையத்துடன், சுத்தமான மற்றும் பசுமை ஹைட்ரஜனுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து இந்தியா அதன் தலைமை பொறுப்பில் இருந்து வெளிப்படுத்தி வருகிறது.
விஞ்ஞானத்தில் இந்தியாவின் வல்லமை : கடந்த 2015ஆம் ஆண்டு, சர்வதேச அளவிலான சூரிய மின்சக்தி பூங்காக்கள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அதன் உலகளாவிய இயற்கை எரிபொருள் கூட்டணியை காலநிலை நடவடிக்கைக்கு ஏற்ப ஆதரித்து வருகிறது. தனிநபர்கள் தங்களது நீண்டகால ஆரோக்கியத்தின் அடிப்படையில் அன்றாட முடிவுகளை எடுப்பது போல, கிரகத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு ஏற்ப வாழ்க்கை முறை முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
யோகாவை உலகளாவிய இயக்கமாக மாற்றியது போல், நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை ஏற்கும் வகையில் உலகை இந்தியா ஒருமுகப்படுத்தி உள்ளது. பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமானதாக உள்ளது.
இந்தியா முன்னிறுத்திய சர்வதேச தினை ஆண்டின் உள்நோக்கம் : பருவநிலை மாற்றத்திற்கு இடையே விரைவான மற்றும் புத்திசாலித்தனமான விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் தினை, அல்லது ஸ்ரீ அண்ணா உணவுகளை மேம்படுத்தலாம். சர்வதேச தினை ஆண்டில், நாம் தினையை உலக அளவில் கொண்டு சென்றுள்ளோம். இது உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த கோட்பாடுகளை நோக்கி பயணிக்க உதவியாக இருந்து உள்ளது.
இந்தியா மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறி வருகிறது. இது மிக தற்செயலானது அல்ல. அரசின் எளிய மற்றும் அளவிடக் கூடிய மற்றும் நிலையான தீர்வுகள் மூலம் வளர்ச்சிக்கான பாதையை வழிநடத்தும் அதிகாரமாக மாறி உள்ளது. மேலும் விண்வெளி முதல் விளையாட்டு, பொருளாதாரம், தொழில்முனைவோர் என பல்வேறு துறைகளில் இந்திய பெண்களை முன்னிலைபடுத்தி வருகிறது.
ஜி20 அமைப்பின் மூலம் உலக நாடுகளிடம் இந்தியாவின் எதிர்பார்ப்பு : இந்தியாவை பொறுத்தவரை, ஜி20 தலைமை பொறுப்பு என்பது ஒரு உயர்மட்ட தூதரக ரீதியிலான முயற்சி மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் தாய் மற்றும் பன்முகத்தன்மையின் முன்மாதிரியாக உலகிற்கான கதவை திறந்து உள்ளது. ஜி20க்கான தலைமை என்பது இந்திய மக்களின் இயக்கமாக மாறி உள்ளது.
நாட்டில் உள்ள 60 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. ஏறத்தாழ 125 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் பிரதிநிதிகள் இந்த ஜி20 கூட்டத்தில் பங்கேற்றும், பங்கேற்கவும் உள்ளனர். இந்திய தலைமையிலான ஜி20 மாநாடு பிளவுகளை குறைத்து தடிகளை தவிர்க்கவும், ஒத்துழைப்பின் விதைளை விதைக்கவும் முயற்சித்து உள்ளது.
ஜி20 அமைப்பின் தலைவர் என்ற முறையில், ஒவ்வொரு குரலும் கேட்கப்படுவதையும், ஒவ்வொரு நாடும் பங்களிப்பதையும் உறுதிசெய்து, உலகளாவிய அட்டவணையை பெரிதாக்க இந்தியா உறுதியளித்து உள்ளது" என்று பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க : MK Stalin: "உதயநிதி கூறியது குறித்து விவரம் புரியாமல் பிரதமர் மோடி கருத்து" - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!