பெங்களூரு: கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி நேற்று (அக். 6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் தற்போது தேசிய அரசியலை உற்றுநோக்கி வருகிறேன்.
ஒன்றிய அரசு, கர்நாடக அரசு இரண்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக செயல்படாமல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிநடத்துதலின்படியே செயல்படுகிறது. மோடி, ஆர்எஸ்ஸின் கைப்பாவையாக இருக்கிறார். இங்கு நடப்பது பாஜக அரசோ அல்லது மோடி அரசோகூட அல்ல, இது ஆர்எஸ்எஸ் தலைமையிலான அரசு" என்றார்.
ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவை மோடி
மேலும், ஆர்எஸ்எஸ் குறித்து அவர் படித்துக்கொண்டிருக்கும் புத்தக்கத்தில் இருந்து மேற்கொள்காட்டி, "சங்பரிவாரங்கள் நாட்டின் வளர்ச்சி குறித்தோ, வறுமை ஒழிப்பு குறித்தோ ஒருபோதும் யோசித்தது கிடையாது. அவர்கள் நாடு முழுவதும் தங்களது வேர்களை பரப்புவதற்கே பணியாற்றி வருகின்றனர்.
![modi rss, rss with modi, modi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13276035_rss1.jpg)
இந்தியா முழுவதும் ஏறத்தாழ ஆர்எஸ்எஸ் அமைப்பு 4 ஆயிரம் உறுப்பினர்களுக்கு, இந்திய ஆட்சிப்பணி (IAS, IPS) தேர்வுக்கு என்றே பயிற்றுவித்து, பல்வேறு உயர் பதவிகளில் அமரவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 676 ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பணியில் சேர்ந்துள்ளனர்.
மனுதர்மமே முதன்மை
இவர்களின் இலக்கு மனுதர்மத்தை அமல்படுத்துவதுதான். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இந்துத்துவத்தை முன்னிறுத்துகிறார்கள். வறுமையில் இருப்போரின் தேவையை நிறைவேற்றுவதே அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும், இந்துத்துவாவை திணிப்பது அல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி தர்ணா - லக்னோ விமான நிலையத்தில் பரபரப்பு