ETV Bharat / bharat

'பெண்கள் அவர்களுக்கான அதிகாரங்களைப் பெற பாடுபட்டவர் ஜெ.!' - பிரதமர் மோடி புகழாரம்!

author img

By

Published : Feb 24, 2021, 12:17 PM IST

நாட்டில் பெண்கள் அவர்களுக்கான அதிகாரங்களைப் பெறுவதற்காகப் பெரும் பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எனப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

PM Modi Remembering Jayalalithaa Ji on her birth anniversary

டெல்லி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இவரது பிறந்தநாளையொட்டி பல்வேறு தலைவர்களும் வாழ்த்துச் செய்திகளைப் பதிவிட்டு, அவருடனான நினைவுகளை வெளிப்படுத்திவருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலலிதா மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்த, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.

பெண்கள் தங்களுக்கான அதிகாரங்களைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுக்காக மிகவும் பாடுபட்டவர். அவருடனான எனது சந்திப்புகள் எப்போதும் என் மனத்திற்கு நெருக்கமானவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.