டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள அக்.29ஆம் தேதி இத்தாலி புறப்பட்டுச் சென்றார்.
சுற்றுப்பயணத்தின் போது, வாட்டிகன் சிட்டியில் போப் ஃபிரான்சிஸை சந்தித்து உரையாடினார். இதையடுத்து, அக். 30, 31 தேதிகளில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
ஐந்து நாள் பயணம்
பின்னர், நவம்பர் 1,2 தேதிகளில் ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த உலக தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் (COP26) பங்கேற்று உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, கிளாஸ்கோவில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு (நவ. 2) இந்தியா புறப்பட்டார்.
விருந்தோம்பலுக்கு நன்றி
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"நமது பூமியின் எதிர்காலம் குறித்த இரண்டு நாள் தீவிர விவதாத்திற்கு பிறகு கிளாஸ்கோவில் இருந்து கிளம்பியுள்ளேன். இந்தியா பாரிஸ் ஒப்பந்தத்தை கடந்தது மட்டுமில்லாமல் அடுத்த 50 ஆண்டுகளுக்கான ஒரு லட்சியத்தையும் அமைத்துள்ளது.
நீண்ட நாள்கள் கழித்து பழைய நண்பர்களையும், புதியவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னை வரவேற்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், கிளாஸ்கோவில் எனக்கு அன்பாக விருந்தோம்பல் அளித்த ஸ்காட்டிஷ் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி இன்று (நவ. 3) காலை டெல்லி திரும்பினார்.
இதையும் படிங்க: புகழ்பெற்ற ரோம் ட்ரெவி நீரூற்றை ஜி20 தலைவர்களுடன் பார்வையிட்டார் மோடி!