பிரதமர் நரேந்திர மோடி கதார் நாட்டின் மன்னர், ஷேக் தமிமம் பின் ஹமாத் அல் தானி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இன்னும் சில நாள்களில் கத்தார் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இந்தியா சர்பில் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். கத்தார் மன்னரும் தீபவளி பண்டிகைக்கான வாழ்த்தை தாமதமாக பகிர்ந்துகொண்டார்.
பின்னர், வர்த்தகம் தொடர்பாக இருவரும் முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு போன்ற துறை குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
குறிப்பாக கத்தார் நாட்டின் முதலீடுகளை அதிகரிக்க சிறப்பு செயற்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் ஓய்ந்தவுடன் இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19க்கு பின் முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸ்