ETV Bharat / bharat

'கமல்நாத் அரசை கவிழ்த்ததில் பிரதமரின் பங்கு முக்கியமானது' - பாஜக தேசிய செயலாளர் - மத்திய பிரதே செய்திகள்ட

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்ததில் பிரதமர் மோடியின் பங்கு முக்கியமானது என்று பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார்.

'கமல்நாத் அரசை கவிழ்த்ததில் பிரதமரின் பங்கு முக்கியமானது' - பாஜக தேசிய செயலாளர்

author img

By

Published : Dec 17, 2020, 3:53 PM IST

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை விளக்கும் வகையில் மத்தியப் பிரதேசத்தில் மாநாடு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா, "மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்த்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பிரதமர் நரேந்திர மோடிதானே தவிர தர்மேந்திர பிரதான் அல்ல" என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், இந்தாண்டு மார்ச் மாதம் மத்தியப் பிரதேச காங்கிரஸின் இளம் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸிலிருந்து விலக பாஜகவில் இணைந்தார். இதனால் 15 மாதங்கள் மத்தியப் பிரதேசத்தை ஆட்சி செய்த கமல்நாத் அரசு கவிழ்ந்தது.

'கமல்நாத் அரசை கவிழ்த்ததில் பிரதமரின் பங்கு முக்கியமானது' - பாஜக தேசிய செயலாளர்

கைலாஷ் விஜயவர்ஜியா பேச்சு குறித்து முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் நரேந்திர சலுஜா தனது ட்விட்டரில், "கமல்நாத் அரசை கவிழ்த்ததில் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகித்ததாக கைலாஷ் விஜயவர்ஜியா ஒப்புக்கொள்கிறார்.

நாங்கள் ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் சொல்கிறோம். ஆனால், காங்கிரஸில் நிலவிய உட்கட்சி பூசல் காரணமாக கமல்நாத் அரசு கவிழ்ந்தது என்று பாஜக பொய் கூறுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், "மத்தியப் பிரதேச அரசை கவிழ்த்ததில் தனக்கு பங்கு உள்ளது என்பதை மோடி ஒப்புக்கொள்வாரா? இதன் காரணமாகவே ஊரடங்கை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதா? மோடி இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.