ETV Bharat / bharat

நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள் - அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்த்தூவி மரியாதை!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள்
நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள்
author img

By

Published : Jan 23, 2022, 1:59 PM IST

டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் இன்று(ஜன.23) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேதாஜி சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் பராக்கிரம் திவாஸ் வாழ்த்துக்கள் (Parakram Diwas).

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெயந்தி இன்று, இந்நாளில் அவருக்கு தலை வணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைகொள்கிறான்" என்று பதிவிட்டுள்ளார்.

  • सभी देशवासियों को पराक्रम दिवस की ढेरों शुभकामनाएं।

    नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जयंती पर उन्हें मेरी आदरपूर्ण श्रद्धांजलि।

    I bow to Netaji Subhas Chandra Bose on his Jayanti. Every Indian is proud of his monumental contribution to our nation. pic.twitter.com/Ska0u301Nv

    — Narendra Modi (@narendramodi) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக கடந்த ஆண்டு ஒன்றிய அரசு நேதாஜியின் 125ஆவது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில், ஜனவரி 23ஆம் தேதியை 'பராக்ரம் திவாஸ்' அதாவது 'பராக்கிரம தினம்' என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கிரானைட் சிலை

பிரதமர் மோடி கடந்த ஜன.21ஆம் தேதி நேதாஜியை கௌரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் கிரானைட்டால் செய்யப்பட்ட பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தச் சிலை 28 அடி உயரம், 6 அடி அகலம் கொண்டதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலாசாகேப் தாக்கரே பிறந்தநாள்

இதேபோல், சிவசேனா கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்தநாளான இன்று அவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து ட்விட்டரில், "பாலாசாகேப் தாக்கரேவின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினேன். பாலாசாகேப், எப்போதும் மக்களுக்காக துணை நின்ற தலைசிறந்த தலைவராக என்றும் நினைவுகூரப்படுவார்" என்று பதிவிட்டுள்ளார்.

  • I pay homage to Shri Balasaheb Thackeray on his Jayanti. He will be remembered forever as an outstanding leader who always stood with the people.

பாலாசாகேப் தாக்கரே ஜன.23, 1926ஆம் ஆண்டு புனேவில் பிறந்தவர். பாலாசாகேப் 1960ஆம் ஆண்டு 'ஃப்ரீ பிரஸ் ஜர்னல்' ( 'Free Press Journal') என்ற தினசரி செய்தித்தாளில் கார்ட்டூனிஸ்ட்டாக வேலை செய்து கொண்டிருந்ததை விட்டுவிட்டு ஜூன் 19, 1966அன்று மராத்தியர்கள் அல்லது மகாராஷ்டிர மக்களின் நலனுக்காக சிவசேனாவை நிறுவினார்.

2012ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி தனது 86ஆவது வயதில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: UP polls: 22 லட்சம் இளைஞர்களுக்கு வேலை- அகிலேஷ் வாக்குறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.