ETV Bharat / bharat

கோவிட் பாதிப்பு அதிகரிப்பு, பிரதமர் மோடி இன்று ஆலோசனை! - கோவிட்

நாட்டில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் இன்று (ஜன.13) மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Jan 13, 2022, 12:37 PM IST

டெல்லி : மாநில முதலமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் இந்த ஆலோசனை காணொலி வாயிலாக நடைபெறுகிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஒமைக்ரான் வகை கோவிட் பரவல் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ்கள் எளிதில் பரவிவருகின்றன என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால், “நாட்டில் கோவிட் பாதிப்புகள் அதிதீவிரமாக பரவிவருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பரவல் அதிகரித்து காணப்படுகிறது” என்றார்.

இந்த நிலையில் பிரதமர் மாநில முதலமைச்சர்களுடன் இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக ஜன.9ஆம் தேதியும் மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் அதிக பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா (22.39 சதவீதம்), மேற்கு வங்கம் (32.18 சதவிகிதம்), டெல்லி (23.1 சதவிகிதம்) மற்றும் உத்தரப்பிரதேசம் (4.47 சதவிகிதம்) உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க : காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லிக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.