மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனர் பதவிக்கான தேர்வுக்குழு வரும் திங்கள் கிழமை(மே.24) கூடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தக் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா, எதிர்க்கட்சியான காங்கிரசின் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்திரி ஆகியோர் உள்ளனர்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முந்தைய இயக்குனர் ஆர்.கே.சுக்லாவின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து சிபிஐ அமைப்பிற்கு முழு நேர இயக்குனர் என ஒருவர் இல்லாமல் இருந்து வந்தார். பிரவீன் சின்ஹா தற்காலிக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
புதிய இயக்குனரை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதை அடுத்து தேர்வுக் குழு தற்போது கூடியுள்ளது. புதிய இயக்குனராக எல்லைப் பாதுகாப்பு படை தலைவர் ராகேஷ் அஸ்தானா, தேசியப் புலனாய்வு முகமை தலைவர் வை.சி.மோடி, உத்தரப் பிரதேச டிஜிபி ஹிதேஷ் சந்திரா ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’பாபா ராம்தேவ்வுக்கு எதிராக பேரிடர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுங்கள்’ - இந்திய மருத்துவக் கூட்டமைப்பு