ETV Bharat / bharat

ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் அதிவிரைவுத் திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர்

author img

By

Published : Oct 13, 2021, 8:49 PM IST

தற்சார்பு இந்தியா தீர்மானத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் அடித்தளம் அமைக்கப்படுகிறது என அதிவிரைவுத் திட்டத்தை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

PM Modi
PM Modi

நாட்டின் பொருளாதார, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான அதிவிரைவுத் திட்டத்தை(GatiShakti) பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.13) டெல்லியில் தொடங்கி வைத்தார். அத்துடன் பிரகதி மைதானத்தில் புதிய கண்காட்சி வளாகத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "தற்சார்பு இந்தியா தீர்மானத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் அடித்தளம் இன்று அமைக்கப்படுகிறது. பிரதமரின் அதிவிரைவு தேசிய பெருந்திட்டம், தற்சார்பு இந்தியா வாக்குறுதிக்கான இந்தியாவின் நம்பிக்கையை பெறும். இந்தப் பெருந்திட்டம் 21ஆம் இந்தியாவின் நூற்றாண்டுக்கு அதிவிரைவு சக்தியை அளிக்கும்.

இந்திய மக்கள், இந்திய தொழில்துறை, இந்திய வர்த்தகம், இந்திய உற்பத்தியாளர்கள், இந்திய விவசாயிகள் ஆகியோர் இந்த அதிவிரைவு சக்தி பிரச்சாரத்தின் மையமாக உள்ளனர்" என பிரதமர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற போது கிடப்பிலிருந்த நூற்றுக்கணக்கானத் திட்டங்களை ஆய்வு செய்ததையும் அவற்றுக்கான தடைகளை அகற்ற அனைத்துத் திட்டங்களையும் ஒரே தளத்தில் கொண்டு வந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக தாமதங்களை தவிர்ப்பதில் தற்போது கவனம் செலுத்தப்படுவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். முழு அரசு அணுகுமுறையுடன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசின் ஒட்டுமொத்த சக்தியும் ஒருங்கிணைக்கப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'சாவர்கர் மன்னிப்பு விவகாரம்' விவாதப்பொருளாக மாறியுள்ள ராஜ்நாத் சிங் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.