நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.
முதல்கட்டமாக வரும் 18ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 20ஆம் தேதியும் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுத்துவரும் நடவடிக்கைள் குறித்து கேட்டறிகிறார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் இதுவரை 94 போலீசார் உயிரிழப்பு