டெல்லி:நாட்டின் மாபெரும் ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மகோத்ச்வ்-2022 திருவிழாவை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த ட்ரோன் விழா இன்றும், நாளையும் (மே 27&28) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆயுதப்படைகள், மத்திய ஆயுதப்படைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ட்ரோன் ஸ்டார்ட்அப்கள் என 1,600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாடுகளை காட்சிப்படுத்துவார்கள். மேலும் அது குறித்து விளக்குவார்கள்
இந்தியா மீதான முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை இந்த மன்றம் ஒன்றிணைக்கிறது. இந்தத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள அனைவரையும் நிகழ்ச்சியைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விழாவையடுத்து விவசாயிகளுக்கு உதவும் ட்ரோன் இயக்குபவர்களை சந்தித்து மோடி கலந்தலோசிக்க உள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ரூ 2,900 கோடி மதிப்பீட்டில் 5 ரயில் திட்டங்கள்