மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இன்று தங்களது மாநில தினத்தை கொண்டாடி வருகின்றன. இதற்கு பல தேசிய தலைவர்கள், பல மாநில மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரு மாநிலங்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “அருணாச்சலப் பிரதேச மக்களுக்கும் எனது மாநில தின நல்வாழ்த்துகள். கலாசாரம், நாட்டின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பில் அருணாச்சலப் பிரதேச மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மாநிலம் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநிலத்தில் உள்ள சகோதர சகோதிரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மிசோ கலாச்சாரத்தால் தேசம் முழுவதும் பெருமிதம் கொள்கிறது.
மிசோரம் மக்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்பவர்கள், இயற்கையோடு இணக்கமாக வாழ்வதற்கான அர்ப்பணிப்புமிக்கவர்கள். அம்மாநில வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...நிதி ஆயோக்: மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை