கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஐஐடி கான்பூரில் இன்று 54ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அப்பது பேசிய அவர், தொழில்நுட்பம் மிகுந்த வலிமையைக் கொண்டுள்ளது. இதில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். ஆனால், மனித உணர்ச்சிகளை மறந்துவிடக்கூடாது. ரோபோக்களாக மாறிவிடக்கூடாது. எப்போதும் கருணைக்கு கடவுச்சொல் இருக்கக்கூடாது.
செயற்கை நுண்ணறிவைவிட மனித அறிவுக்கும், உணர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைவரது வாழ்க்கையிலும் சுலபாமா சவாலா என்பதை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வரும். அந்த நேரத்தில் நீங்கள் சவாலையே தேர்வு செய்ய வேண்டும்.
அதுவே உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும். இந்நாளில் ஒவ்வொரு துறையும் தொழில்நுட்ப உதவியுடன் இயங்குகிறது. அதில், நீங்கள் முக்கியப் பங்காற்ற முடியும். இந்தியா சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டை கொண்டாடும்போது, மாணவர்கள் முக்கிய பங்காக இருப்பார்கள்.
நீங்கள் உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதைத்தான் உங்களது பெற்றோரும் விரும்புவர். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துக்கள். உங்களுக்கு உதவ அரசு எப்போதும் தயாராக இருக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: Kanpur Metro: கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்