ETV Bharat / bharat

Vaccination for children: ஜனவரி 3-ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி - பிரதமர் - PM Modi 3 big announcements in address to nation

Vaccination for children: குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி
குழந்தைகளுக்கு தடுப்பூசி
author img

By

Published : Dec 25, 2021, 10:14 PM IST

Updated : Dec 25, 2021, 11:00 PM IST

Vaccination for children: இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி மக்களிடம் இன்று (டிசம்பர் 25) உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, "ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். 18 லட்சம் தனிப்படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மாநில அரசுகளுக்கு 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா பரவலை தடுக்க நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

தடுப்பூசி போடும் பணிகளை இந்திய அரச முன்னரே தொடங்கி விட்டது. தடுப்பூசி போடப்பட்டதால் கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெல்ல முடிந்தது.

ஆக்சிஜன் ஆலைகள்

தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதில் ஒன்றிய அரசு விரைவாக செயல்பட்டது. நாடு முழுக்க 3,000 ஆக்சிஜன் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும். டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசிக்கும் விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும்.

இயல்பு நிலை

நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பொருளாதாரம் எழுச்சி அடைந்து வருகிறது. கரோனா தடுப்பூசியை 90 விழுக்காடு பேர் முறையாக செலுத்தியுள்ளனர்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி

141 கோடி தடுப்பூசிகள் நாடு முழுக்க போடப்பட்டுள்ளன. இந்த சூழலில் நாட்டு மக்கள் பதட்டம் அடைய தேவையில்லை. குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கும். பூஸ்டர் தடுப்பூசி டோஸ் போடும் பணிகள் ஜனவரி 10-ம் தேதி முதல் தொடங்கும்.

பூஸ்டர் தடுப்பூசி

முன்களப் பணியாளர்களுக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். 60 வயதிற்கு மேற்பட்டவற்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில் வர உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: Compulsary quarantine:வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமை படுத்துதல் கட்டாயம்

Last Updated : Dec 25, 2021, 11:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.