ETV Bharat / bharat

"தமிழகத்தில் கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்" - பிரதமர் மோடி - today latest national news

Modi has criticized the TN HRCE Department: தமிழகத்திலுள்ள கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம் என்று தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Modi has criticized the TN HRCE Department
தமிழகத்தில் கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம் - பிரதமர் மோடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 11:03 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் சந்திரசேகர் ராவ், மூன்றாவது முறையாக வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். அதேவேளையில், எதிர்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன.

  • These pictures from Nizamabad speak for themselves.

    There is immense support for BJP’s development agenda. The formation of the National Turmeric Board has been welcome by farmers.

    At the same time, there is great anger against BRS and Congress for their corruption and… pic.twitter.com/DgIxEYsok8

    — Narendra Modi (@narendramodi) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனால், தெலங்கானா தேர்தல் களம் அதகளப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தைப் பல வாரங்களுக்கு முன்பே பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடங்கி விட்ட நிலையில், நேற்று (அக்.3) தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர், தெலங்கானா மாநில அரசையும், முதல்வர் சந்திரசேகர் ராவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மேலும், தமிழக அரசையும் விமர்சித்தார், பிரதமர் மோடி. இது தொடர்பாக அவர் பேசியதாவது, "தமிழகத்திலுள்ள கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. இந்து கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது அநியாயம். சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களைத் தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை.

ஆனால், கோயில்களை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதன் சொத்துக்களையும், வருமானத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் எவ்வளவு மக்கள் தொகையோ, அதற்கேற்றவாறு உரிமை என தற்போது காங்கிரஸ் பேசிவருகிறது. இ

வ்வாறு பேசும் காங்கிரஸ், கோயில்களை மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்று கூறுமா? குறிப்பாக, தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சியான திமுகவிடம் காங்கிரஸ் பேசி கோயில்களை விடுவிக்குமாறு வலியுறுத்த முடியுமா?" என்று தமிழக அரசையும் திமுக-காங்கிரஸ் கூட்டணியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மேலும், தமிழக கோயில்கள் விவகாரத்தில் மாநில இந்து சமய அறநிலையத்துறை அத்துமீறுவதாக, தமிழக பாஜக பலமுறை குற்றம் சாட்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது அண்மையில் சனாதன விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டமும் நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருக்கும் கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம் என்றும், அதன் சொத்துக்களையும், வருமானத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் தமிழக அரசை பிரதமர் மோடி கடுமையாக சாடியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நியூஸ்கிளிக் விவகாரம்; வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை பத்திரிகையாளர் மன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.