இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி " சிவமொக்காவில் ஏற்பட்ட வெடி விபத்து உயிரிழப்பு பெரும் வலியை ஏற்படுத்துகிறது. துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என, ட்வீட் செய்துள்ளார்.
இந்த விபத்து குறித்த உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், "சிவமொக்கா அருகே குவாரியில் நேற்றிரவு(ஜன.21) ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. நேற்றிரவு முதல் நான் மூத்த அலுவலர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மீட்பு நடவடிக்கைகளுக்காக அணிகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது, அவர்கள் அனைவரும் விரைவாக குணமடைய விரும்புகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க... கர்நாடகாவில் பயங்கர வெடி விபத்து- எட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு!