தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய தலைவர்கள் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு தேசத்தின் சார்பாக எனது பணிவாக அஞ்சலி. அமைதி, அகிம்சை, எளிமை, வழிமுறைகளின் தூய்மை மற்றும் பணிவு போன்ற அவரது கொள்கைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி
தேசத் தந்தையான மதிப்பிற்குரிய பாபுவுக்கு எனது அஞ்சலி. அவரது லட்சியங்கள் கோடிக்கணக்கான மக்களை ஊக்குவித்துச் செல்கின்றது. தியாகிகள் தினமான இன்று, இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியர்களின் நல்வாழ்விற்காக தங்களை அர்ப்பணித்த அனைவரின் தியாகங்களையும் நினைவு கூறுவோம் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எழுவர் விடுதலை, தமிழர்களின் உணர்வு சார்ந்தது - அமைச்சர் ஜெயகுமார்!