டெல்லி: இது தொடர்பாக வழக்கறிஞர் வினீத் ஜிண்டல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள மனுவில், “சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றும், சனாதன தர்மத்தை கொசு, டெங்கு, கரோனா மற்றும் மலேரியா ஆகியவற்றோடு ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியது, ஒரு இந்துவாக, ஒரு சனாதன தர்மத்தை பின் தொடர்பவராக இருக்கும் மனுதாரரின் மத கோட்பாடுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது.
-
Plea In Supreme Court Seeks FIR Against TN Minister Udhayanidhi Stalin & DMK Leader A Raja For Remarks Against 'Sanatana Dharma' #UdhayanithiStalin #SanatanaDharma https://t.co/HHIFJr2g3b
— Live Law (@LiveLawIndia) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Plea In Supreme Court Seeks FIR Against TN Minister Udhayanidhi Stalin & DMK Leader A Raja For Remarks Against 'Sanatana Dharma' #UdhayanithiStalin #SanatanaDharma https://t.co/HHIFJr2g3b
— Live Law (@LiveLawIndia) September 7, 2023Plea In Supreme Court Seeks FIR Against TN Minister Udhayanidhi Stalin & DMK Leader A Raja For Remarks Against 'Sanatana Dharma' #UdhayanithiStalin #SanatanaDharma https://t.co/HHIFJr2g3b
— Live Law (@LiveLawIndia) September 7, 2023
அவரது வார்த்தைகள் சனாதன தர்மத்தின் மீதான அவரது வெறுப்பை வெளிக்காட்டுகிறது. அவர், ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அமைச்சராகவும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழியின்படி, அனைத்து மதங்களுக்கும் கண்டிப்பாக மரியாதை அளிக்க வேண்டும்.
ஆனால், அவர் சனாதன தர்மம் குறித்து ஆத்திரமூட்டும் விதத்திலும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசி உள்ளார். மேலும், அவர் மதக் குழுக்களுக்கு இடையே பகைமை உணர்வை வளர்க்கும் நோக்கத்தில் இதனை பேசி உள்ளார். மனுதாரர் ஏற்கனவே இது தொடர்பாக டெல்லி காவல் துறையில் புகார் அளித்து உள்ளார்.
இருப்பினும், டெல்லி காவல் துறையினர் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, இந்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 28 அன்று மேற்படி ரிட் மனுவில் நிறைவேற்றப்பட்ட உத்தரவில், எந்தவொரு புகாரும் இல்லாமல், பிரிவு 153ஏ, 153பி, 295ஏ மற்றும் 506 போன்ற குற்றப் பிரிவுகளில் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன்.
மதம் தொடர்பாக மரியாதைக் குறைவாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையின் மூலம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆ.ராசா சனாதன தர்மம் குறித்து பேசியது உதயநிதி ஸ்டாலினின் வார்த்தைகளை விட இழிவான முறையில் உள்ளது. மேலும், சிபி, டெல்லி காவல் துறை, வடமேற்கு டெல்லி காவல் உதவி ஆணையர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை” என குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 2 அன்று சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் எதிர்க்கப்படுவதைக் காட்டிலும், ஒழிக்கப்பட வேண்டும் என்றும், டெங்கு, மலேரியா மற்றும் கரோனா போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனவும் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: DMK-வை கடுமையாக தாக்கிய அண்ணாமலை!