நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை தணிந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மக்கள் சுற்றுலாப் பயணம், விழாக்கள், மதச் சடங்குகள் ஆகியவற்றில் வழக்கம்போல செயல்படத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்தக் கூட்டங்களில் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
இது தொடர்பாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.) எச்சரிக்கைவிடுத்துள்ளது. கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுபோன்ற கூட்டங்கள் தொற்றைத் தீவிரமாகப் பரவுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும். விழாக்களும் சடங்களும் இன்னும் சில மாதங்கள் கழித்துக்கூட செய்துகொள்ளலாம்.
ஆனால் தொடர்ந்து அலட்சியப்போக்குடன் கூட்டம் சேர்ந்தால், மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது. உலக நாடுகளின் அனுபவம் சொல்லும் செய்தியும் இதுவே" என எச்சரித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மத யாத்திரைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் ஐ.எம்.ஏ. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, வட கிழக்கு மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களின் கையிருப்பில் 1.67 கோடி தடுப்பூசிகள் - சுகாதாரத் துறை