டெல்லி: சட்டக் கல்லூரி 3ஆம் ஆண்டு மாணவர் விஷால் பட்டேல் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள பொதுநல மனுவில், “கர்நாடக, கேரள உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய நீதிபதி வி.எஸ். மலிமத் தலைமையில் அமைக்கப்பட்ட மலிமத் கமிட்டி, குற்றவாளிகளை அறிவியல்பூர்வமாகக் கண்டறிவது குறித்த அறிவியல், தடயவியல் சோதனையை மேம்படுத்த 158 பரிந்துரைகளை 2003ஆம் ஆண்டு அளித்தது.
அதில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தடவியல், அறிவியல் பரிசோதனைக் கூடம் அமைப்பது - கல்லூரி, பள்ளி பாடங்களில் தடயவியல், அறிவியல் பரிசோதனைகள் குறித்த கற்பிப்பது தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் உள்ளன.
மேலும், மாவட்டந்தோறும் தடயவியல் பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும், அதனை மேம்பட்ட முறையில் பராமரிக்க வேண்டும் என்பன போன்று பல்வேறு வழிகாட்டுதல் அதில் உள்ளன. இந்த வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளை மத்திய-மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடைப்பிடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
மேலும், நமது நாட்டில் அறிவியல், தடயவியல் பரிசோதனை கூடத்தில் குறைந்த அளவு பணியாளர்களே பணியில் உள்ளனர் என்பதையும் மனுதாரர் பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க : 'ரியாலிட்டி ஷோ விவகாரம்'; தலைவர்கள் கருத்து