ETV Bharat / bharat

பூலான் தேவி சிலையைத் திறக்கவிடாமல் விமான நிலையத்திலிருந்து பிகார் அமைச்சர் அனுப்பி வைப்பு - ஈடிவி பாரத்

வாரணாசியில் நிறுவப்பட்ட சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பி பூலான் தேவியின் சிலையைப் பறிமுதல்செய்து, அதைத் திறந்துவைக்க வந்த விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானியை விமான நிலையத்தை விட்டு வெளியேறவிடாமல் தடுத்து, பின்னர் கொல்கத்தா செல்லும் விமானத்தில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

பூலான் தேவி சிலையை திறக்கவிடாமல் விமான நிலையத்திலிருந்து பீகார் அமைச்சர் அனுப்பி வைப்பு

author img

By

Published : Jul 26, 2021, 2:57 PM IST

படோஹி (உ.பி.): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்த பூலான் தேவிக்கு உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் ராம்நகர் பகுதியில் சிலை நிறுவப்பட்டது.

சிலை திறக்க ஏற்பாடு

2001ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பூலான் தேவி, "கொள்ளை ராணி" என்று பிரபலமாக அறியப்பட்டார். சமாஜ்வாடி கட்சி சீட்டில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது, டெல்லியில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரின் சிலையை விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவரும், பிகார் அமைச்சருமான முகேஷ் சஹானி நேற்று (ஜூலை 25) திறந்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அந்த சிலையை அலுவலர்கள் அப்புறப்படுத்தினர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

இதனிடையே அவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவலர்கள் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தம்

இந்நிகழ்விற்கு வந்துகொண்டிருந்த பிகார் விலங்கு, மீன்வளத்துறை அமைச்சருமான சஹானி, வாரணாசி விமான நிலையத்திலிருந்து வெளியேவர அலுவலர்கள் அவரை அனுமதிக்கவில்லை. பின்னர் கொல்கத்தா செல்லும் விமானத்தில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

மேலும், தகவலறிந்து வாரணாசி விமான நிலையத்துக்கு விரைந்த கட்சி நிர்வாகிகளின் வாகனங்களை, காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

விமான நிலையம் நோக்கிச்சென்ற அனைத்து வாகனங்களையும் தடுத்து, விசாரணைக்குப் பிறகே மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர்.

பின்னர் சஹானி கூறுகையில், "பாஜக தனது "சாதி மனநிலையை" காட்டுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கட்சி எதிர்ப்புப்போராட்டங்களை நடத்தும்" என்று கூறினார்.

ஹடோஹி துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஆஷிஷ்குமார் தெரிவிக்கையில், "சிலையை நிறுவ அவர்கள் எந்த அனுமதியும் கோரவில்லை. அது நிறுவப்பட வேண்டிய நிலம் கிராம பஞ்சாயத்துக்குச் சொந்தமானது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'எடியூரப்பா தலைவிதி, இன்று தெரியும்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.