ETV Bharat / bharat

இனி "PhonePe" மூலம் வருமான வரி செலுத்தலாம்: எப்படி? - தனி நபர் வரி

இனி "PhonePe" மூலம் வருமான வரி செலுத்தலாம் என பயனர்களுக்கு அந்நிறுவனம் மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 26, 2023, 9:13 PM IST

டெல்லி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் ஃபின்டெக் தளமான PhonePe, தனது செயலி மூலம் வருமான வரி செலுத்தும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இனி வருமான வரித்துறையின் இணையதளத்திற்குள் நுழையாமலேயே UPI அல்லது கிரெடிட் கார்டு மூலம் முன்கூட்டியே வரியைச் செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. வரி செலுத்தப்பட்ட இரண்டு நாட்களில் வருமான வரித்துறையின் போர்ட்டலில் தொகை வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PhonePe செயலியின் உள்நுழைந்து வருமான வரி ஐகானைத் தேர்வு செய்து, அதன் தொடர்ச்சியாகக் காட்டப்படும் வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் வருமான வரியை எளிதாகச் செலுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி ஐகானைத் தேர்வு செய்தவுடன் நீங்கள் செலுத்த வேண்டிய வரி எந்த துறை என்பதைத் தேர்வு செய்ய வேண்டும், வருமான வரி செலுத்த வேண்டிய வருடம் மற்றும் உங்கள் பான் கணக்கு (PAN) விவரங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து வரித்தொகையை கொடுத்து பின்னர் தேர்வு செய்யப்பட்ட கட்டண முறை மூலம் பயனர்கள் வரியைச் செலுத்தலாம்.

வரி செலுத்திய நபருக்கு ஒரு வேலை நாளுக்குள் பரிவர்த்தனை குறிப்பு (UTR) எண் தொலைப்பேசி எண்ணிற்கு வரும். அதனைத் தொடர்ந்து பணம் செலுத்தியதற்கான சலான் இரண்டு வேலை நாட்களுக்குள் கிடைக்கப்பெறும்.

இதையும் படிங்க: மின் துண்டிப்பை கண்டித்து போராட்டம்! பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி!

இது குறித்துப் பேசிய PhonePe நிறுவனத்தின் பில் பேமெண்ட்ஸ் மற்றும் ரீசார்ஜ் துறைத் தலைவர் நிஹாரிகா சைகல், "வருமான வரி செலுத்துவது பொதுமக்களுக்கு பெரும்பாலும் சிக்கல் மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணியாக உள்ளது. இதைச் சுலபமாக்கும் வகையில் PhonePe தனது பயனர்களுக்கு இந்த சேவையை வழங்கியுள்ளது. வரி செலுத்தப் பாதுகாப்பான வழிமுறையை எங்கள் பயனர்களுக்கு வழங்கியுள்ளோம்" எனக்கூறினார்.

இந்த சேவையைத் தொடங்குவதற்காக PhonePe டிஜிட்டல் B2B கட்டண சேவை வழங்குநரான PayMate உடன் கைகோர்த்துள்ளது. PhonePe 50 பதிவு செய்யப்பட்ட 50 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. பாரத் பில் பே முறைமையில் (BBPS) 45 சதவீத பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டில் Fintech, பரஸ்பர நிதிகள் மற்றும் காப்பீட்டுத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.

PhonePe நிறுவனம் இந்த அறிவிப்பை வழங்கியுள்ள நிலையில் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மத்திய அரசின் வருமான வரி இணைய சேவைக்குள் உள் நுழைய முயற்சித்தால் பல நேரங்களில் சேவை நேரம் நீடிக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் அந்த இணைய சேவையை பயன்படுத்தும்போது இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவது சாதாரணம். ஆனால் அதற்கு மாற்றாக PhonePe இப்படி ஒரு சேவையை அறிமுகம் செய்துள்ளது பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீட்டிப்பு... உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மத்திய அரசு முறையீடு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.