உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு மூன்றாம் கட்ட பரிசோதனைக்காக நடத்தப்பட்ட தன்னார்வலர்களின தேர்வு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி பரிசோதனையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து பணியாற்றிவருகின்றன.
தொற்று நோய்களின்போது நிலைமையைச் சமாளிக்க பொது நிறுவனமும், தனியார் நிறுவனமும் இணைந்து பணியாற்றுவது சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
தற்போது, எஸ்ஐஐ மற்றும் ஐசிஎம்ஆர், நாடு முழுவதும் 15 வெவ்வேறு மையங்களில் கோவிஷீல்டின் இரண்டாம், மூன்றாம் மருத்துவப் பரிசோதனைகளை நடத்திவருகின்றன. தற்போது, 40 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகள் தயார்நிலையில் இருப்பதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் எஸ்ஐஐயின் புனே ஆய்வகத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்பார்வையின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், லண்டனில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி தற்போது இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் பெரிய செயல்திறன் சோதனைகளில் பரிசோதிக்கப்பட்டுவருகிறது.