மகாராஷ்ட்ரா: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினரிடம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களிடத்திலிருந்த ஹார்டு டிஸ்கை ஆய்வு செய்ததில் 'Module 2047' என ஒரு திட்ட வரையரையில், ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டுவது, இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்பது போன்ற திட்டங்கள் இருந்ததாக பயங்கரவாதத் தடுப்புப் படைக் கூறியுள்ளது.
இதுகுறித்த தகவல்களை அதிகாரிகள் நாசிக் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். மேலும், பாபுலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேரை சமூக அமைதியைக் குளைத்ததாகக் கூறி மகாராஷ்ட்ராவிலுள்ள மேல்கானில் கைது செய்துள்ளனர்.
அதில், பிஎஃப்ஐ-யின் மேல்கான் மாவட்டத் தலைவர் மவுலான சாஹீத் அகமது அன்சாரி, புனே மாவட்டத் துணைத் தலைஅவர் அப்துல் கய்யும் சேக், மூத்தத் தலைவர் ரசியா அகமது கான், உறுப்பினர் வாசிக் சாயிக் மற்ரும் கொல்ஹாபூரைச் சேர்ந்த செயலாளர் மவுலா நபிசாப் முல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: மாகாராஷ்டிராவில் மின்னல் தாக்கியதில் சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு