சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.
நூறு ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை:
இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று (ஜூலை. 4) பெட்ரோல், லிட்டர் 99.65 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.99 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே இன்று (ஜூலை. 5) பெட்ரோல் விலை 47 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.12 ரூபாய்க்கும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து லிட்டர் 93.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா நெருக்கடி காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.