ETV Bharat / bharat

கரோனா விதிகளை மீறினால் அபராதம் கட்டாயம்: புதுச்சேரி அரசு எச்சரிக்கை! - புதுச்சேரி கரோனா விவரங்கள்

புதுச்சேரி: அரசின் முழு ஊரடங்கை மீறி கடைகள், வணிக வளாகங்கள் திறந்திருந்தால் ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

Penalties are mandatory for violating corona rules!

author img

By

Published : May 19, 2021, 1:19 PM IST

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில், கரோனா தொற்று பரவுவதற்கு காரணமானவர்கள் மீது தொற்று நோய் பரவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி, தற்போது வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்கள் வெளியில் சுற்றினால் 500 ரூபாயும், நோய் வாய்ப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் 1000 ரூபாயும், முகக்கவசம் சரிவர அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாயும், கட்டுப்பாட்டை மீறியும், ஊரடங்கு உத்தரவை மீறியும் திறந்திருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், கம்பெனிகளுக்கு ரூ.5 ஆயிரம், தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காதவர்களுக்கு 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.