டேராடூன்: ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் துக்வான் மஹேதா. இவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டும்ரி ரெஃபரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது அவருக்கு அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளித்துவந்தனர்.
இதனிடையே மருத்துவமனையில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் மஹேதா மூச்சுத்திணறால் அவதிப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், போதிய அளவிலான டீசல் இல்லை என்றும், ஜெனரேட்டரை இயக்க சிறிது நேரம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10-15 நிமிடங்களில் ஆக்சிஜன் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த இடைவெளியில் ஆக்சிஜன் கிடைக்காததால், துக்வான் மஹேதா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மஹேதாவின் மகன் டெக்லால், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிரமத்துக்கு அருகிலிருந்து வயதான 2 பெண்களின் சடலங்கள் மீட்பு - போலீஸ் விசாரணை!