மத்தியப் பிரதேசத்தில் குனா பகுதியில் வசிக்கும் பட்டேலியா பழங்குடியின மக்கள், வித்தியாசமான திருவிழாவை ஆண்டுதோறும் கடைப்பிடிக்கின்றனர்.
அவர்கள் லக்காத் தேவ் கடவுளை வணங்குகின்றனர். பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திருவிழா சமயத்தில் ஒன்றிணைகின்றனர். இந்த திருவிழா பெரும்பாலும் ஹோலி சமயத்தில் ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது.
திருவிழாவின்போது 20 அடி உயரத்தில் மேடை போன்ற அமைப்பை உருவாக்குகின்றனர். அங்கிருந்து 7 அடி உயரத்தில் கயிறு ஒன்று தொங்கவிடப்படுகிறது. கடவுளிடம் பிரார்த்தனை செய்தவர்கள், அது நிறைவேறினால், கயிற்றின் ஒரு முனையைப் பிடித்துக்கொள்கின்றனர்.
மேடை அமைப்பில் உள்ள நபர்கள், கயிற்றைச் சுற்றுகிறார்கள். பிரார்த்தனை செய்யும்போதே, எத்தனை முறை சுற்ற வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்கிறார்களாம்.
இந்த வினோத திருவிழாவில் பங்கேற்க, 25 முதல் 30 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர்.
இதையும் படிங்க: ஹெராயின் கடத்திய இலங்கைப் படகு சிறைப்பிடிப்பு: 6 பேர் சிறையில் அடைப்பு