ETV Bharat / bharat

விமானத்தில் வெடிகுண்டு என கூச்சல்... திடீர் சத்தத்தால் பதறியடித்து ஓடிய பயணிகள்! - கொல்கத்தா

டேக் ஆஃபாக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி அலறியதால் சக பயணிகள் பதறியடித்து விமானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் கொல்கத்தா விமான நிலையத்தில் அரங்கேறி உள்ளது.

Flight
Flight
author img

By

Published : Jun 6, 2023, 1:12 PM IST

கொல்கத்தா : விண்ணை நோக்கி பறக்க இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் கத்தி கூச்சலிட்டதால் சக பயணிகள் பதறிபோய் அலறியடித்து கீழ் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்கம் மாநிலம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கத்தார் தலைநகர் தோஹா வழியாக லண்டன் செல்ல கத்தார் ஏர்லைன்சின் விமானம் தயாராக இருந்தது. விமானம் சில மணி நேரத்தில் புறப்பட தயராக இருந்த நிலையில், பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏறிக் கொண்டு இருந்தனர்.

அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பயணி ஒருவர் கத்தி கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப் போன சக பயணிகள் அலறத் தொடங்கினர். இதையடுத்து விமானத்தை விட்டு 541 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமான சிப்பந்திகள் உடனடியாக மத்திய தொழில்படை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் விமானம் முழுவதும் சோதனையிட்டனர். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கத்தி கூச்சல் போட்ட நபரை மத்திய தொழில்படை பாதுகாப்பு வீரர்கள் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சக பயணி விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதாக அதனால் கத்தி கூச்சலிட்டதாகவும் தெரிவித்ததாக பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், பிடிபட்ட நபரின் தந்தைக்கு தகவல் கொடுத்த மத்திய தொழில்படை பாதுகாப்பு வீரர்கள், அவரை உடனடியாக விமான நிலையத்திற்கு வருமாறு அழைத்து உள்ளனர்.

பாதுகாப்பு வீரர்களால் பிடிக்கப்பட்ட நபரின் தந்தை விமான நிலையத்திற்கு விரைந்த நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளி வந்தது. பிடிபட்ட நபர் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்றும் மன நலன் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவ ஆதாரங்களை அவரது தந்தை காண்பித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : Torpedo : இந்திய கடற்படை புது மைல்கல்.. ஆழ்கடலில் இலக்கை அழிக்கும் ஆயுதம் சோதனை வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.