டெல்லி: தேசிய தலைநகர்ப் பகுதி, டெல்லியின் பிற பகுதிகளில் இன்று காலை காற்று மாசுவின் தரக் குறியீட்டு எண் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என டெல்லியின் காற்று மாசுவினைக் கணக்கிடும் சஃபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சஃபர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒட்டுமொத்தமாக டெல்லியில் காற்றின் தரம் கணிக்க இயலாத அளவு மிகவும் மோசமான பிரிவிற்குச் சென்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்பரப்பில் உள்ள காற்று மிகவும் மோசமாக புகையில் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக டெல்லியில், அடுத்த இரண்டு நாள்களுக்கு மிகவும் மோசமான பிரிவிலேயே காற்று மாசுபாடு இருக்கும் எனவும் சஃபர் குறிப்பிட்டுள்ளது.
டெல்லியின் பாலம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 10 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.