ETV Bharat / bharat

குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்.. அந்தரத்தில் தொங்கிய லாரி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 6:35 PM IST

Gujarat bridge collapses: குஜராத் மாநிலத்தில் உள்ள சுரேந்திரநகர் மாவட்டத்தில் ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்டிருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gujarat bridge collapses
குஜராத்தில் திடீரென இடிந்து விழுந்த பாலம்

குஜராத்: சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாடி பகுதியில் உள்ள சுரா தாலுகாவுடன் தேசிய நெடுஞ்சாலையை இணைக்க பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்துள்ளது. இப்பாலம் கட்டி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இப்பாலத்தின் கட்டமைப்பில் கோளாறு இருந்ததாகவும், ஆகையால் அதிக எடையுள்ள கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வானகம் என ஏராளமான வாகனங்கள் இப்பாலத்தில் சென்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (செப்.24, ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் பாலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, பாலம் திடீரென இரண்டு துண்டாக இடிந்து விழுந்துள்ளது.

பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில், பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த குப்பை பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை ஆற்றில் விழுந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆற்றில் மூழ்கியவர்கள் மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு பத்திரமாக மீட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  • સુરેન્દ્રનગરના વસ્તડીનો જર્જરિત બ્રિજ ધરાશાયી, 110 ગામને જોડતા આ બ્રિજ પરથી પસાર થતું ડમ્પર નદીમાં ખાબક્યુ, સવાર 4 લોકોનું કરાયું રેસ્ક્યૂ. ક્યાં સુધીભ્રષ્ટાચારી બચતા રહેશે? #SurendraNagar pic.twitter.com/pPFwo0E2HS

    — ketan joshi (@KetJoshiEditor) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும், அனுமதி இல்லாத இந்த பாலத்தில் குப்பை லாரி கடக்க முயன்றதே இந்த விபத்திற்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.சி சம்பத் கூறுகையில், "போகாவோ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் சுமார் 40 ஆண்டுகள் பழமையானது. தேசிய நெடுஞ்சாலையை சுரா தாலுகாவுடன் இணைக்கும் இந்த பாலம் மிகவும் பழமையானதால், பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும் இப்பாலமானது ஏற்கனவே சாலைகள் மற்றும் கட்டுமானத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, புதிய பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் ஐபோன் 15 சீரிஸ் வரலாறு காணாத விற்பனை! எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.